ஒரே நாடு ஒரே தேர்தல்; அறிக்கை வழங்க அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி,

நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட் டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த மசோதா மீதான அறிக்கையை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி வாரத்தில் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு அதன் தலைவர் சவுத்ரி நேற்று மக்களவையில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.

அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கான பரிந்துரை அறிக் கையை வழங்குவதற்கான அவகாசம் குளிர்கால கூட்டத்தொடர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் மாதம் இறுதியில் நிறவடையும் என்பது குறிப்படத் தக்கது.

Source link