சென்னை: தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு 4 நாட்கள் மட்டுமே அவகாசம் என்று தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏப்.23ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு, பிரசாரம், வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் என அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக இருக்கின்றன. வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ம் தேதி முற்பகல் 11 மணிக்கு தொடங்குகிறது.
அதன் பின்னர் தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருகிறது. அதாவது மார்ச் 31(தெலுங்கு வருடப்பிறப்பு), ஏப்ரல் 3ம் தேதி(புனித வெள்ளி), ஏப்ரல் 4ம் தேதி(சனிக்கிழமை) ஏப்ரல் 5ம் தேதி (ஞாயிறு) ஆகிய 4 நாட்களும் பொது விடுறை நாட்கள் ஆகும். ஆகையால் இந்த நாட்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியாது. இதை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் கூறி உள்ளதாவது;
2006ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள் 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் 06.04.2026 (திங்கட்கிழமை) வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
1881ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் பொது விடுமுறையால் அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள 31.03.2026(செவ்வாய்கிழமை), 01.04.2026 (புதன்கிழமை) 03.04.2026 (செவ்வாய்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கால அவகாசம் குறைவாக உள்ளதால், வேட்பாளர்கள் ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து, நெரிசலை தவிர்க்குமாறு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
