நாங்கள் கிரிக்கெட் விளையாடிய போது டி20 தொடர்கள் இல்லை. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்காக அவரது தலைமையிலான அணி வென்றுள்ளது. அதனால் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் என சொல்வேன்.
ஜார்க்கண்ட் எனும் சிறிய மாநிலத்தில் இருந்து புறப்பட்டு வந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக வளர்ந்தவர். அவருக்கு முன்பாக அந்த மாநிலத்தில் இருந்து இந்திய அணிக்காக விளையாடியவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை. அந்த வகையில் அவர் பலருக்கு இன்ஸ்பிரேஷன். ‘அவரால் முடியும் என்றால்; நம்மாலும் முடியும்’ என்ற நம்பிக்கையை இளம் வீரர்களுக்கு அவர் தருகிறார்.
