கம்பம்: மேகமலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்காக மேற்கொண்ட சர்வே பணிகளை தற்காலிகமாக நிறத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேகமலையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் கெடுபிடியால் வனப்பகுதிகளை அளவீடு செய்ய கலெக்டர் வைத்திநாதன் உத்தரவில் வனத்துறை, நில அளவைத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசார் குழு அமைத்து சர்வே பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அளவீடு பணி நடைபெறும் பகுதிகளில் கள நிலவரத்தை ஆராய்ந்த உளவுத்துறை, அவசர அறிக்கை ஒன்றை மாநில போலீஸ் தலைமைக்கு வழங்கியது. அதில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பிருப்பதால், சர்வே பணிகளை ஒத்தி வைக்க பரிந்துரைக்கப்பட்டது.
இதன்பேரில் மேகமலை பகுதியில் நில அளவீடு செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
