கால்பந்து: இந்திய அணி அறிவிப்பு * பிரேசில், உருகுவே போட்டிக்காக

புதுடில்லி: பிரேசில், உருகுவே உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில் ஒவ்வொரு அணியும் வரும் செப். 21 முதல் அக். 6 வரை நான்கு நட்பு போட்டிகளில் பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதையடுத்து, 138 வது இடத்தில் உள்ள இந்திய அணி, சமீபத்தில் உலக கோப்பை தொடரில் பங்கேற்ற மூன்று அணிகளுடன் மோத தயாராகி வருகிறது. இதன்படி, வரும் 26ல் இந்திய அணி, 44 வது இடத்தில் உள்ள பனாமாவுடன் மோத உள்ளது. இப்போட்டி பெங்களூரு கன்டீவ்ரா மைதானத்தில் நடக்கும்.

பின், அக். 3ல் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன உலகின் ‘நம்பர்-5’, பிரேசில் (1958, 1962, 1970, 1994, 2002), அக். 6ல் உலக கோப்பை தொடரில் இரு முறை சாம்பியன் ஆன உருகுவே (1930, 1950), அணிகளுடன், இந்தியா விளையாட உள்ளது. இப்போட்டிகள் கொல்கட்டாவில் நடக்கும்.

இதற்கான 26 பேர் கொண்ட இந்திய அணியை பயிற்சியாளர் காலித் ஜமில் அறிவிக்கப்பட்டது. கோல் கீப்பர்களாக அல்பினோ கோமஸ், குர்பிரீத் சிங் சாந்து, சோம் குமார் உள்ளனர்.

தற்காப்பு பகுதியில் அபிஷேக் சிங், ஆகாஷ் மிஷ்ரா, அன்வர் அலி, மத்திய களத்தில் அனிருத் தபா, ஆஷிக் குருனியன், பருக் சவுத்ரி, முன்களத்தில் இர்பான், மான்விர் சிங், ரஹிம் அலி, ரியான் வில்லியம்ஸ், விக்ரம் பிரதாப் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் செப். 14 முதல் பெங்களூருவில் துவங்குகிறது.

Source link