அந்த வகையில் வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் (பல்லாரி) கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரையும், சின்ன வெங்காயம் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.100 வரையும் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
வெங்காயம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்களை கூறிய அவர் குறிப்பாக ஈரான் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்ததால் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. மேலும், அதிகளவில் வெங்காயம் உற்பத்தியாகும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததே தற்போதைய விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
வெங்காய விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். அதன்படி கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பெரிய வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
