TN Assembly Live Updates: முதலில் கேள்வி நேரம்; பின்னர் மானியக் கோரிக்கை விவாதம்

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான விவாதங்களும் விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. 2 நாட்கள் விடுமுறைக்கு பின் சட்டப்பேரவை திங்கள் கிழமை மீண்டும் கூடியது.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் புதன்கிழமை பால்வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இன்று முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. 

கேள்வி நேரம் முடிந்ததும், குறிப்பிட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. மேலும் திருமருகல் பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதலால் பயிர்கள் சேதமடைந்தது குறித்து ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறார்.

  • Sep 02, 2026 07:37 IST

    முதலில் கேள்வி நேரம்; பின்னர் மானியக் கோரிக்கை விவாதம்

    சட்டப்பேரவை இன்று காலை 9 :30 மணிக்கு நடைபெறும் நிலையில் முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பின்னர் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link