அந்த வகையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், மேட்டூர் அணையை முதல்வர் விஜய் தாமதமாக திறந்து விட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இந்த நேரத்தில் அரசியல் பேச வேண்டாம் என நினைக்கிறேன். இருந்தாலும், மேட்டூர் அணை நீரை சரியான நேரத்தில் திறக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவு கூட முதல்வருக்கு இல்லை. சட்டமன்றத்தில் ஒவ்வொரு கேள்விகளுக்கும் அமைச்சர்கள் வேறு பதிலை சொல்கிறார்கள். தமிழை சரியாகக் கூட உச்சரிக்க தெரியவில்லை.
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கூட பேசினார். அதற்கு மரிய வில்சன், எங்களுக்கு தமிழ் முக்கியமில்லை, கிறிஸ்துவம் தான் முக்கியம் என்று கூறுகிறார். இன்று அமைச்சர் ஜெகதீஸ்வரி இல்லங்களுக்கு பதிலாக இலக்கங்கள் என்று வாசிக்கிறார். எதை வாசிக்க வேண்டும், எதை வாசிக்க கூடாது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அது தவறில்லை, தவறை திரித்து கொள்வதற்கு தவறில்லை. அந்த எண்ணங்கள் தான் முக்கியம். தஞ்சாவூரில் இன்னும் 1.75 ஏக்கர் நிலம் இன்னும் பயிரிடாமல் இருக்கிறது. இந்த விவசாயிகளுக்கு யார் நிதியை கொடுப்பது? முதலமைச்சர் கொடுப்பாரா? ஆனால் சமூக வலைத்தளங்களில் ரூட் மாஃபியா தான் நடக்கிறது” என்று கூறினார்.
