தவெக சட்டமன்றத்தில் தேர்தலில் வெற்றி பெற்று 100 நாட்களை கடந்துள்ளது. இந்த சூழலில் திமுக எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. நடப்பாண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் தவெக – திமுகவுக்கு இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது.இத்தகைய சூழலில் தவெகவையும், முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் திமுக.அந்த வகையில் சென்னையில் திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில்,கடந்த 5 வருடங்களில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் மாறாத புன்னகையை விட்டுச்சென்றிருக்கின்ற திராவிட மாடல் ஆட்சியை நடத்தியவர் நம்முடைய மாண்புமிகு கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
இன்றைக்கும்,இந்த காலகட்டத்திலும் சரி, அதாவது முதலமைச்சராக யார் வேண்டுமானாலும் வந்துவிடலாம். இந்த தேர்தல், அந்த தேர்தலை ஒட்டி கழகம் ஒரே ஒரு 15 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் கொண்டு சட்டமன்றத்திலே நுழைகின்றது.
தலைவர் கலைஞர் அவர்கள் பொழுது வேடிக்கையாக சொல்லுகின்றார், எப்படி மும்முடிச் சோழன் என்று சொல்வார்களோ, அதுபோல சேர, சோழ, பாண்டிய மண்டலங்கள் மூன்றிற்கும் நான் ஒருவன் தான் பிரதிநிதியாக இருக்கிறேன் என்று கூறினார்.
உடனே அன்றைக்கு மா.பொ.சி ஐயா சொல்லுகின்றார். எங்கே மக்க இடங்களிலெல்லாம் தொண்டை மண்டலத்தைத் தவிர கழகத்தைக் காணோம் என்கின்றார். இந்த காணோம் என்கின்ற வார்த்தையை பல பேர் இன்றைக்கு ஆணவத்திலே சொல்கிறார்கள் என்று கூறினார்.
மா.பொ.சி ஐயா அன்றைக்கு கேட்டவுடன் நம்முடைய பேரறிஞர் அண்ணா சொல்லுகின்றார்.ஐயாவிற்கு நான் நினைவூட்டுகின்றேன், தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து என்றொரு பழமொழி உண்டு. ஆகவே அந்த சான்றோர்கள் எங்களை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். அந்த சான்றோர்கள் இதர மண்டலத்திலே இருக்கின்ற சான்றோர்களையும் இனிமேல் வழிநடத்தி எங்களுக்கு ஓட்டளிக்கச் செய்வார்கள் என்று சொன்னார். ஏனென்றால் நாங்கள் வைத்திருக்கின்ற கொள்கை அப்படி, பற்று அப்படி என்று கூறினார்.
மேலும் நிச்சயமாக 5 வருட ஆட்சியையும், இன்றைக்கு நடக்கின்ற அவல ஆட்சியையும் மக்கள் நினைத்துப் பார்த்து மீண்டும் நம்முடைய தளபதி அவர்களை, நம்முடைய கழகத் தலைவர் அவர்களை ஆட்சியிலே அமர்த்துவார்கள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், ஹ்அந்த சமயத்திலே நாம் உள்ளே நுழையும் பொழுது ஆட்சியிலே இருக்கின்ற அந்த அரசாங்கத்திற்கு 150 பேர், நமக்கு 15 பேர் தான். இன்றைக்கு நமக்கு 59 பேர் போல.அது குறித்தும் அப்பொழுது ஒரு விவாதம் வந்தது.
15 பேர் தானே வருகிறார்கள், அன்றைக்கு ஆட்சியிலே இருந்தவர்கள் நம்மைப் பார்த்து கிண்டலாகச் சொன்னது 15 பேர் தானே வருகிறார்கள், இவர்களைச் சமாளிப்பதற்கு எங்களுடைய பெண் உறுப்பினர்களே போதும்’ என்று சொன்னது மதிப்பிற்கும் மரியாதைக்குரிய ஐயா சி.சுப்பிரமணியம் அவர்கள்.
எத்தகைய பிற்போக்குத்தனமான கருத்து! ஏன் பெண் உறுப்பினர்களால் சமாளிக்க முடியாதா என்ன? அப்படி சொன்னார்கள். சற்றும் அசராமல் தலைவர் கலைஞர் பேரறிஞர் அண்ணாவை மேற்கோள்காட்டிச் சொன்னார்.செஞ்சிக்கோட்டையிலே ஏறியவர்கள் எல்லோரும் தேசிங்கு ராஜாக்கள் அல்ல. யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் நாற்காலியில் அமரலாம். ஆனால் முதலமைச்சர் என்றால் முதல்வர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும், நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும்தான் என்று கூறினார்.
