விரதம் இருப்போர் கவனத்திற்கு..!! செப்டம்பரில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய நாட்கள்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

ஆன்மிக ரீதியாக பல்வேறு சிறப்புகள் நிறைந்த மாதமாக செப்டம்பர் மாதம் விளங்குகிறது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியும் இம்மாதத்திலேயே கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. மேலும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்குரிய புண்ணிய காலமான மகாளய பட்சம் தொடங்குவதும், பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் பிறப்பதும் இம்மாதத்தின் தனிச்சிறப்பாகும்.

இவற்றுடன் தொடர்ந்து வரும் நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற பெருவிழாக்களுக்கான தொடக்க மாதமாகவும் இது அமைகிறது. அந்த வகையில், செப்டம்பர் 2026 மாதத்தில் வரக்கூடிய முக்கிய விசேஷங்கள், விரத தினங்கள் மற்றும் சுபமுகூர்த்த தேதிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முக்கிய விசேஷ தினங்கள்:

செப்டம்பர் 04 (ஆவணி 18, வெள்ளி): கோகுலாஷ்டமி, ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி

செப்டம்பர் 14 (ஆவணி 28, திங்கள்): விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 27 (புரட்டாசி 10, ஞாயிறு): மகாளய பட்சம் ஆரம்பம்

முக்கிய விரத நாட்கள்:

அமாவாசை: செப்டம்பர் 10 (ஆவணி 24, வியாழன்)

பௌர்ணமி: செப்டம்பர் 26 (புரட்டாசி 09, சனி)

கிருத்திகை: செப்டம்பர் 03 (ஆவணி 17, வியாழன்) & செப்டம்பர் 30 (புரட்டாசி 13, புதன்)

ஏகாதசி: செப்டம்பர் 07 (ஆவணி 21, திங்கள்) & செப்டம்பர் 22 (புரட்டாசி 05, செவ்வாய்)

சஷ்டி: செப்டம்பர் 02 (ஆவணி 16, புதன்) & செப்டம்பர் 17 (ஆவணி 31, வியாழன்)

பிரதோஷம்: செப்டம்பர் 08 (ஆவணி 22, செவ்வாய்) & செப்டம்பர் 24 (புரட்டாசி 07, வியாழன்)

சங்கடஹர சதுர்த்தி: செப்டம்பர் 29 (புரட்டாசி 12, செவ்வாய்)

மாத சிவராத்திரி: செப்டம்பர் 09 (ஆவணி 23, புதன்)

திருவோணம்: செப்டம்பர் 22 (புரட்டாசி 05, செவ்வாய்)

செப்டம்பர் 07 (ஆவணி 21, திங்கள்): தேய்பிறை முகூர்த்தம்

செப்டம்பர் 13 (ஆவணி 27, ஞாயிறு): வளர்பிறை முகூர்த்தம்

செப்டம்பர் 17 (ஆவணி 31, வியாழன்): வளர்பிறை முகூர்த்தம்

(குறிப்பு: செப்டம்பர் 2026 மாதத்தில் வாஸ்து நாட்கள் எதுவும் இல்லை).

வாகன ஓட்டிகளுக்கு சர்ப்ரைஸ் ஆப்பு வைத்த 26 சுங்கச்சாவடிகள்..!! டோல்கேட் கட்டணம் ரூ.20 வரை உயர்ந்ததால் அதிர்ச்சி..!!

Source link