2029-ல் விஜய் பிரதமர் ஆவார் என தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் கடந் த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி,இன்று சட்டபேரவை நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக தவெக MLA கனிமொழி வருகை தந் தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்கடந்த 2025-ஆம் ஆண்டிலும் இதேபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
புதுச்சேரியில் விஜய் பேச்சு…தாக்கம் ஏற்படுமா?
2026 தேர்தலில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே பார்த்தது. 2029-ல் இந்திய நாட்டின் பிரதமர் யார் என்பதை டெல்லி முடிவு செய்யப்போவதில்லை. அதைத் தமிழ்நாடே தீர்மானிக்கும் என்ற அதிர்ச்சிகரமான அரசியல் மாற்றம் நிகழும் தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்ததில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு முக்கியப் பங்கு உண்டு.
அதேபோல 2029-லும் அவர் தளபதியின் கையைப் பிடித்துக் அழைத்துச் சென்று அமர வைப்பார். இங்கிருந்தே பிரதமர் உருவாவாரா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,அதை அடுத்தடுத்து பொறுத்திருந்து பார்க்கலாம் என அவர் பதிலளித்தார்.
