நேபாளத்தில் பரிதாபம்; உறவினர்கள் வைக்கோல் பொம்மைகளுக்கு இறுதி சடங்கு

நேபாள-திபெத் எல்லையில் பனிச்சரிவால் கோஷி ஆற்றில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கரையோரத்தில் இருந்த ஏராளமான கிராமங்கள் மற்றும் நகரங்கள் முற்றிலும் உருக்குலைந்தன. இந்த வெள்ளத்தில், அப்பகுதியில் இருந்த வீடுகள், பாலங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. இப்பேரிடரில் 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், கிட்டத்தட்ட 4,000 பேர் காணாமல் போயுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது வாரமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மீட்புப் பணியின் போது சகதியில் சிக்கி உயிர் இழந்த ஏராளமானோரின் உடல்கள் மீட்கப்படு வருகின்றன. இதற்கிடையில், சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் கிடைக்கப்பெறாத நபர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிர் இழந்திருப்பார்கள் என்பதால், அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்து வருகின்றனர். 

இந்நிலையில், காத்மண்டில் உள்ள பசுபதிநாத் கோயிலில் இன்று இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இதில், காணாமல் போனவர்களின் உடல்களுக்குப் பதில் வைக்கோல் மற்றும் பார்லியால் செய்யப்பட்ட உருவ பொம்மைகளைப் வைத்து, அவரது உரவினர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். இந்த சம்பவம் பார்ப்போரைக் கண்கலங்கச் செய்துள்ளது.  

Source link