பழவேற்காடு, திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: கடலுக்குச் செல்ல இடைக் காலத் தடை

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி-F17 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் காரணமாக, பழவேற்காடு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் விண்ணில் ஏவப்படும் வேளையில் ஏற்படக்கூடிய எதிர்பாராத அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தடை தொடங்கும் நேரம்: செப்டம்பர் 3-ஆம் தேதி மாலை 4:00 மணி

தடை முடியும் நேரம்: செப்டம்பர் 4-ஆம் தேதி காலை 6:00 மணி

குறிப்பிட்டுள்ள இந்தக் காலக்கட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லக் கூடாது என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து, அரசு மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Source link