துல்கர் சல்மான் புதிதாக தயாரித்து நடித்துள்ள படம் ‘ஐ எம் கேம்’. இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், காயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். இப்படம், துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் ஆகும். செப்டம்பர் 3ஆம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் இப்படம் வெளியாகிறது.
இப்படத்தின் தமிழ் பதிப்பினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் முன் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் “சென்னையில் நடைபெறும் என்னுடைய முதல் நிகழ்ச்சி இது. இப்படத்தின் தமிழ் விளம்பர நிகழ்வுக்காக இங்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழில் என்னை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன். வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
துல்கர் சல்மான் மிக அழகான தயாரிப்பாளர், மிகப்பெரிய நடிகர், மிகச்சிறந்த மனிதர் என் நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் எனது நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. படப்பிடிப்பின்போது எங்களுக்குள் இருந்த நட்பும் நகைச்சுவையான தருணங்களும் இந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது. எனது கதாபாத்திரம் குறித்து தற்போது அதிகம் சொல்ல முடியாது; படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் சிஎம் விஜய்யோட பெரிய ரசிகன். அவருடன் மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் அர்ஜூன் தாஸ் நடித்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அது பண்ணமுடியவில்லை. அதனால் நான் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறேன். அடுத்ததாக ரஜினி, அஜித், சூர்யாவோடு நடிக்க ஆசை” என்றார்.
