தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை மறு கட்டமைப்பு செய்வதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அண்மையில் நடைபெற்ற திமுகவின் செயற்குழுவில் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது .
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் 76 தலைமைக் கழகப் பிரதிநிதிகளுடன் காணொளியில் தற்பொழுது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வருவாய் மாவட்டங்களில் இரண்டு பிரதிநிதிகள் விகிதம் என மொத்தம் 76 பிரதிநிதிகளை மு.க.ஸ்டாலின் நியமித்திருக்கிறார். பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம், கிளைக் கழகங்களை சீரமைத்து அனுப்பிவைக்கும் பணியை இந்த 76 பேரும் பார்வையிடுவர் என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த 76 தலைமைக் கழகப் பிரதிநிதிகள் உடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
