எகிப்தில் கோர விபத்து; பஸ் கவிழ்ந்ததில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி

கெய்ரோ; எகிப்தில் பயணிகள் பஸ் விபத்துக்குள்ளானதில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

தெற்கு சினாய் மாகாணத்தில் தாஹாப்., நுவேபா சுற்றுலா தளம் புகழ்பெற்றது. இந்த சுற்றுலா தளத்தை இணைக்கும் தாஹாய், நுவையா நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது.

இந்த பஸ்சில் ஏராளமானோர் இருந்துள்ளனர். அல்சாதா என்ற பகுதிக்கு முன்னதாக பஸ் சென்ற போது, எதிர்பாராத விதமாக தலைகீழாக கவிழ்ந்து. விபத்தில் சிக்கியது. விபத்தில் பஸ்சில் இருந்தவர்களில் 22 பெர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டு உள்ளனர்.

தகவலறிந்த போலீசாரும், மீட்பு படையினரும் சம்பவ பகுதிக்குச் சென்று உடல்களை கைப்பற்றினர். இந்த விபத்தில் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இதை ஜோர்டான் வெளியுறவு அமைச்சக்ம் உறுதி செய்துள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link