இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாடிய பிரதமர் பாலேந்திர ஷா, “இந்த நெருக்கடியான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டின் தலைமை தைரியம், ஆதரவு மற்றும் உறுதியை வழங்க வேண்டும். இயற்கையின் யதார்த்தத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனாலும், இதற்காக நாங்கள் கண்ணீர் சிந்த மாட்டோம்.
ரசுவா, நுவாகோட், தாடிங் ஆகிய மூன்று மாவட்டங்கள் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த நாட்டிற்குமான பேரிழப்பாகும். இதற்கு எதிராக உறுதியுடனும் தைரியத்துடனும் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் உறுதியாகப் போராடுகிறோம்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அனைத்து பாதுகாப்புப் படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் வழங்கி வருகின்றன. அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருவதுடன், அவர்களுக்குத் தங்குமிடம் மின்சாரம், குடிநீர் விநியோகம், போக்குவரத்து ஆகியவற்றையும் அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
