‘வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும்; சூரியன் தான் நிரந்தரம்’-மு.க.ஸ்டாலின் பேச்சு

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை மறு கட்டமைப்பு செய்வதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அண்மையில் நடைபெற்ற திமுகவின் செயற்குழுவில் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் 76 தலைமைக் கழகப் பிரதிநிதிகளுடன் காணொளியில் தற்பொழுது ஆலோசனை நடத்தினார். வருவாய் மாவட்டங்களில் இரண்டு பிரதிநிதிகள் விகிதம் என மொத்தம் 76 பிரதிநிதிகளை மு.க.ஸ்டாலின் நியமித்திருக்கிறார். பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம், கிளைக் கழகங்களை சீரமைத்து அனுப்பிவைக்கும் பணியை இந்த 76 பேரும் பார்வையிடுவர் என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த 76 தலைமைக் கழகப் பிரதிநிதிகள் உடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ”கட்சியின் புதிய விதிகளால் பொறுப்புகளை இழப்பவர்களை கைவிடமாட்டேன். புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என ஆராய்ந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும். கொள்கையற்ற கட்டமைப் பெற்ற கட்சிகள் வரும் போகும். மின்மினி பூச்சிகள் நிரந்தரமல்ல; சூரியன் தான் நிரந்தரம்” என தெரிவித்துள்ளார்.

Source link