முதல்வர் விஜய் பேசுவது போல் ஏஐ மூலம் மோசடி; சிபிசிஐடி கடும் எச்சரிக்கை!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி இரண்டே ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தது நாடு முழுவதும் ஆச்சரியத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்நாட்டின் பல ஆண்டு காலமாக மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வந்த திமுக, அதிமுக என இருபெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்திருப்பது மிகப்பெரிய அரசியல் மாற்றமாக கருதப்படுகிறது.

இந்த சூழலில் தமிழக முதல்வர் விஜய் தொடர்பான வீடியோக்களை வடநாட்டு சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்ஸ் வீடியோக்களை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகின்றனர். குறிப்பாக விஜய் தான் அடுத்த பிரதமர் என்று செய்தி பரப்பப்பட்டு வைரலாக்கி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க முதல்வர் விஜய் பேசுவது போல் ஏஐ வீடியோக்களை வெளியிட்டு உண்மைக்கு புறம்பான செய்திகளை சோசியல் மீடியாக்களில் பரப்பப்பட்டு மக்களை குழப்புவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏமுதல்வர் விஜய் இந்தி மொழியில் பேசுவது போல் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணமோசடி நடைபெறுவதாக சிபிசிஐடி போலீசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் சமூக வலைத்தளங்களில் சைபர் குற்றம் தொடர்பாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகங்களில் தமிழக முதல்வர் விஜய் பேசுவது போல் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்று இந்தி மொழியில் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த காணொளியில் பொதுமக்கள் ஏதேனும் பணம் உதவி தேவைப்பட்டால் ஒரு வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் கடந்த 1ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முதல்வர் விஜய்யின் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட ஏஐ காணொளி பேஸ்புக் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. அந்த காணொளியில் பல பாகிஸ்தான் நாட்டைச்  சேர்ந்த பேஸ்புக் ஐடி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே பொய்யாக உருவாக்கப்பட்ட காணொளி தொடர்பான போலியான ஐடி மற்றும் அது தொடர்பான லோகோ குறித்து தகவல்களை பெற மெட்டா நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

அதே சமயம், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட டீப் பேக் (Deep fake) காணொளிகள், முதல்வர் விஜய் போன்று ஆள்மாறாட்டம் செய்து வெளியிட்டப்படும் போலியான பதிவுகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source link