சென்னை: ஏதேனும் ஒன்று பழுதடைந்திருப்பதைப் பார்த்தால், வெறும் குறை மட்டும் சொல்லிக்கொண்டிருக்காமல், அதைச் சரிசெய்வதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு: சிறுவயதில், என் நண்பர்கள் கணிதத்தில் பின்தங்கியிருந்தபோது, அதற்காக நான் வருத்தப்பட்டு அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பேன். அந்தச் செயல், அந்தப் பாடத்தை நான் இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ளவும் உதவியது.
ஏதேனும் ஒன்று பழுதடைந்திருப்பதைப் பார்த்தால், வெறும் குறை மட்டும் சொல்லிக்கொண்டிருக்காமல், அதைச் சரிசெய்வதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையே சிறுவயது முதலே எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது.
ஒருவேளை அதைச் சரிசெய்ய முடியாத சூழல் இருந்தால், அதை ஏற்றுக்கொண்டு, ‘எப்போதாவது ஒருநாள் என்னால் முடியும் என்று அந்த சூழல் வரும்போது சரிசெய்வேன்’ என்று மனதிற்குள் உறுதிபூண்டு கொள்வேன். காலப்போக்கில், அந்தப் பண்பு என் இயல்பிலேயே ஒன்றிப்போனது.
நமது கிராமப்புறப் பொருளாதாரத்திற்கான தீர்வுகளைக் கண்டறிவதை நான் எனது தனிப்பட்ட பொறுப்பாகக் கருதுகிறேன். இந்தப் பொறுப்பை எனக்கு யாரும் வழங்கவில்லை; நானே மகிழ்ச்சியுடன் இதை ஏற்றுக்கொண்டேன். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
