ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா ஆதிக்கம்; எண்ணெய் கப்பல் போக்குவரத்து சுமூகம்!

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில், ஒரே நாளில் 1.80 கோடி பீப்பாய் எண்ணெய் ஏற்றிக் கொண்டு 40 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன.

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிபர் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியைக் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் ஒரு மாகாணமாக அறிவித்த அவர், சரக்கு கப்பல்களைக் குறிவைக்கும் ஈரானின் திறனை ஒடுக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், ஈரானின் ட்ரோன் தாக்குதல்களிலிருந்து சரக்கு கப்பல்களைப் பாதுகாக்கும் விதமாக, ஹார்முஸ் ஜலசந்தியை மையமாகக் கொண்டு தனது போர் உத்தியை அமெரிக்கா மாற்றியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள வான் பாதுகாப்புத் தளங்கள், ரேடார் அமைப்புகள், கடல்சார் சொத்துக்கள் மற்றும் கம்யூனிகேஷன் தளங்கள் உட்பட ஈரானுக்கு சொந்தமான சுமார் 60 ராணுவ இலக்குகளை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

ரேடார் அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதால் ஈரானால் இனி கப்பல்களைக் கண்காணிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில், ஒரே நாளில் 1.80 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு 40 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. இதன்மூலம், போர் துவங்கிய இந்த 6 மாதங்களில் ஒரே நாளில் அதிகபட்ச பீப்பாய் கச்சா எண்ணெய் போக்குவரத்து நிகழ்ந்துள்ளது. போருக்கு முன்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, நாளொன்றுக்கு 2 கோடி பீப்பாய் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Source link