krishna Jayanti 2026 puja time கிருஷ்ண ஜெயந்தி 2026 வழிபடும் முறை, வழிபாட்டிற்கான நேரம் மற்றும் கண்ணனுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியங்கள்

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தை நாம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி, பாஞ்சராத்திர ஜெயந்தி என்பது உள்ளிட்ட பல பெயர்களால் இந்த பண்டிகைய உலகம் முழவதிலும் உள்ள இந்துக்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு செப்டம்பர் 04ம் தேதியன்று வெள்ளிக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இவந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, பாஞ்சராத்திர ஜெயந்தி ஆகியவை ஒரே நாளில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த நாளில் பகவான் கிருஷ்ணருக்குரிய வழிபாடுகளை மேற்கொள்ளலாம். கிருஷ்ண ஜெயந்தியை எப்படி கொண்டாட வேண்டும், எந்த நேரத்தில், எந்த முறையில் வழிபட வேண்டும், கண்ணனுக்கு என்ன நைவேத்தியம் படைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். கிருஷ்ண ஜெயந்தி 2026 தேதி செப்டம்பர் 04 வெள்ளி அஷ்டமி திதி துவக்கம் செப்டம்பர் 04 அதிகாலை 02.09 அஷ்டமி திதி நிறைவு செப்டம்பர் 04 இரவு 11.46 ரோகிணி நட்சத்திரம் துக்கம் செப்டம்பர் 04 அதிகாலை 12.57 ரோகிணி நட்சத்திரம் நிறைவு செப்டம்பர் 04 இரவு 11.22 வழிபாட்டு நேரம் காலை 09.15 – 10.20,
பகல் 12.15 – 01.30,
மாலை 06.00 – இரவு 09.00

கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறை :

1. செப்டம்பர் 03ம் தேதியே வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள கிருஷ்ணரின் படம் அல்லது சிலையை சுத்தம் செய்து எடுத்து வைத்து விட வேண்டும்.

2. செப்டம்பர் 04ம் தேதியன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, விரதத்தை துவக்க வேண்டும். இந்த நாளில் முடிந்தவர்கள் முழு உபவாசமாக விரதம் இருக்கலாம். அல்லது குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பவர்கள் முழு உபவாசமாக இருக்கலாம்.

3. குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் புதியதாக குழந்தை கிருஷ்ணரின் சிலையை வாங்கி வீட்டில் வைத்து வழிபடலாம். கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டிற்கு பிறகு மற்ற தெய்வங்களுடன் அந்த கிருஷ்ணர் சிலையையும் வைத்து வழிபடலாம்.

4. வீட்டின் வாசல் துவங்கி, பூஜை அறை வரை கிருஷ்ணரின் பாதச்சுவடுகளை வரைந்து, கண்ணனை மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் அழைக்க வேண்டும்.

5. கிருஷ்ணருக்கு விருப்பமான பாடல்களை பாடி, துளசி இலைகளால் அர்ச்சனை செய்யலாம்.

6. கிருஷ்ணருக்கு முன் நெய் தீபம் ஏற்றி வைத்து, தீப தூப ஆராதனை காட்டி, வழிபாட்டினை நிறைவு செய்யலாம்.

7. வழிபாட்டிற்கு பிறகு கிருஷ்ணருக்கு படைத்த நைவேத்தியங்களை ஏதாவது குழந்தைகளுக்கு தானமாக வழங்க வேண்டும். குழந்தைகள் சாப்பிட பிறகு தான் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் சாப்பிட வேண்டும்.

8. வெறும் பலகாரங்கள் மட்டும் படைத்து வழிபடுபவர்கள் காலை மற்றும் மாலையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிபாட்டு நேரத்தில் வழிபாடு செய்யலாம். இலை போட்டு சாதம், சாம்பார், வடை, பாயாசம் ஆகியவற்றுடன் சேர்த்து படையலிட்டு வழிபாட்டு செய்ய நினைப்பவர்கள் பகல் நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நைவேத்தியமாக படைக்க வேண்டியவை :

கிருஷ்ணருக்கு படைக்கும் நைவேத்தியங்கள் என்று சொன்னால் முறுக்கு, சீடை, அதிரசம், அல்வா, சர்க்கரை பொங்கல், சுண்டல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். முடிந்தவர்கள் எத்தனை வகையான பலகாரங்களை வேண்டுமானாலும் படைத்து வழிபடலாம். முடியாதவர்கள் எளிமையாக பாலில் இருந்து கிடைக்கும் 5 பொருட்களை படைக்கலாம். பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய 5 பொருட்களும் கண்ணனுக்கு மிகவும் பிடித்தவையாக கருதப்படுகிறது. நெய்யை கண்ணனுக்கு படைக்கலாம் அல்லது நெய் தீபமாக ஏற்றலாம். இவைகளையும் படைக்க முடியவில்லை என்பவர்கள் எளிமையாக அவல் பாயசம், சர்க்கரை கலந்த அவல் ஆகியவற்றை கண்ணனுக்கு படைத்து வழிபடலாம்.

Source link