மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர், செப்டம்பர் 27ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில், ரோஹித் சர்மாவை சேர்க்கவா, வேண்டாமா என்பது குறித்து பிசிசிஐ தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இத்தொடரில், ரோஹித் சர்மாவை சேர்த்தால், அடுத்து ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர் வரை ரோஹித்தை சேர்க்க வேண்டும். இதனால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதிற்கு, பிசிசிஐ அதீத முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
ஷுப்மன் கில் முடிவு: இந்நிலையில், ஓபனர் இடத்திற்கு ரோஹித் சர்மாவை தேர்வு செய்வதா அல்லது யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை தேர்வு செய்வதா என்பது குறித்து, கேப்டன், கோச் போன்றவர்களிடம் கருத்து கேட்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், முதலில் கேப்டன் ஷுப்மன் கில்லிடம் கருத்து கேட்டனர். அப்போது பதில் அளித்த கில், ‘‘கிரிக்கெட்டில், ஒவ்வொரு கால கட்டத்திலும், அணிக்கு தேவையான முடிவை, உறுதியான மனதுடன் எடுக்க வேண்டும். மகேந்திரசிங் தோனி கேப்டனாக இருந்தபோது, விரேந்தர் சேவாக்கை ஓரங்கட்டி, ரோஹித் சர்மாவை கொண்டு வந்தார். ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தபோது, ஷிகர் தவனை ஓரங்கட்டி என்னை (ஷுப்மன் கில்) கொண்டு வந்தார். தற்போது, ரோஹித் சர்மாவை ஓரங்கட்டி யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை கொண்டு வந்துதான் ஆக வேண்டும்’’ எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், ‘‘தென்னாப்பிரிக்கா பிட்ச், வேகத்திற்கு சாதகமாக இருக்கும். அங்கு, டாப் ஆர்டரில் வலது, இடது கை காம்பினேஷன் முக்கியம். இதனால், யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை கட்டாயம் சேர்த்துதான் ஆக வேண்டும். கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், இப்படிப்பட்ட கடினமான முடிவை, முழு மனதுடன் எடுக்க வேண்டும்’’ என கில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர், தேர்வுக்குழு உறுப்பினார்கள், பிசிசிஐ சீனியர் நிர்வகிகளிடம் கருத்து கேட்டு, இறுதியில் முக்கிய முடிவை வெளியிட பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதுவும், இன்னும் இரண்டு வாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்களாம்.
இந்திய அணி முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, இதுவரை 288 ஒருநாள் போட்டிகளில், 280 இன்னிங்ஸ் பேட்டிங் ஆடி, அதில் 48.95 சராசரியில் 93 ஸ்ட்ரைக் ரேட்டில் 11,895 ரன்களை அடித்துள்ளார். இதில், 34 சதம், 62 அரை சதங்களும் அடங்கும்.
ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடருக்கு பிறகு, ரோஹித் சர்மா 26 ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் ஆடி, 51.56 சராசரியில், 110.84 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,186 ரன்களை அடித்துள்ளார்.
யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ரன்கள்: யாஷஸ்வி ஜெய்ஷ்வாலுக்கு இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில்தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 6 போட்டிகளில் 71.25 சராசரியில் 285 ரன்களை அடித்துள்ளார். இதில், 2 சதங்கள் அடங்கும். அதாவது, இரண்டு முறை அரை சதம் கடந்து, அதனை சதமாக மாற்றியுள்ளார்.
இவரை ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடரில் சேர்க்கவில்லை என்றால், அடுத்து அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருடனும், ஓபனர் இடத்திற்கு போட்டி போடும் நிலைமை ஜெய்ஷ்வாலுக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
