காதலனை அடித்து ஓடவிட்ட கும்பல்..!! காதலியை மாறி மாறி கூட்டு பலாத்காரம்..!! ராணிப்பேட்டையில் அதிர்ச்சி..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

ராணிப்பேட்டை தெங்கால் பாலாற்றங்கரை அருகேயுள்ள அரசுக்கு சொந்தமான பண்ணைப் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலருடன் அமர்ந்து நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் அங்கு வந்த 3 பேர், தகராறு செய்து காதலனை கண்மூடித்தனமாக தாக்கினர். பின்னர், கத்திமுனையில் மிரட்டி அந்த இளம் பெண்ணை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதுதொடர்பாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட பார்த்திபன் (A1), சிவராஜ் (A2), ராஜா (A3) ஆகிய மூன்று பேரையும் அன்றைய தினமே சுற்றிவளைத்துக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டு வழக்கு நடந்து வந்தது. அனைத்துத் தரப்பு சாட்சிகள் மற்றும் அறிவியல் பூர்வ ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திருமதி தேன்மொழி அவர்கள் குற்றவாளிகள் மூவருக்கும் கடுமையான தண்டனைகளை வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, முதல் குற்றவாளியான பார்த்திபனுக்கு ஆயுள் தண்டனையுடன் 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.1.40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற இரு குற்றவாளிகளான சிவராஜ் மற்றும் ராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், தலா ரூ.1.30 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமா? இது மக்களுக்கு காது குத்தும் திட்டம்.!! இறங்கி அடித்த உதயநிதி..!!

Source link