பாகிஸ்தானில் இந்து கோயில் இடிப்பு; சிதைந்த 100 ஆண்டுக்கால பாரம்பரியம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லாகூரிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்த இந்த கோயிலை மதரஸா விரிவுபடுத்துவதற்காகச் செயல்பாட்டின் போது இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.   

இந்த சம்பவம் குறித்து, அருகிலுள்ள மதரஸாவை விரிவுபடுத்துவதற்காக இடம் ஒதுக்கும் நோக்கில், பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய கோயிலை இடித்துள்ளதாகச் சிறுபான்மை அமைப்பினரும், உள்ளூர் மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.  

இந்நிலையில், இந்த கோயில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், “சிராஜ் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்ட செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளம் மீதான இந்த வன்முறையைக் கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இடிக்கப்பட்ட கோயிலை உடனடியாகச் சீரமைத்து, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 

இதனிடையே, இந்த சம்பவம் குறித்துப் பேசிய வெளியேறியோ சொத்து அறக்கட்டளையின் உயர் அதிகாரி கூறுகையில், ”கனமழை காரணமாகவே 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த கோயிலின் நிலம் யாருக்கும் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ இல்லை. இந்த கட்டிடத்தைச் சீரமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் முடிவெடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.  

Source link