பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி: 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கோயமுத்தூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளின் சார்பில் 2026–27-ம் ஆண்டிற்கான 47-வது மாணவ, மாணவியர் கால்பந்து போட்டிகள், கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தாராபுரம், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 46 பள்ளிகளில் இருந்து 1,286 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில், 12 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் அக்சரம் சர்வதேசப் பள்ளி முதலிடமும், ஸ்ரீ நாச்சம்மாள் வித்யாவாணி பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் ஸ்ரீ சக்தி சர்வதேசப் பள்ளி முதலிடமும், தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.

மாணவியர் பொதுப்பிரிவில் தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளி முதலிடமும், அகரம் பப்ளிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. தொடர்ந்து போட்டியில் சிறந்து செயல்பட்ட கோல் கீப்பர் மற்றும் வீரர்,வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதே போல  பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. போட்டி ஆணையரும் தேசிய நடுவருமான  சிவசுப்பிரமணியன் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற போட்டிகளை பள்ளி முதல்வர்  கருணாம்பிகேஸ்வரி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி. ரஹ்மான் – கோவை மாவட்டம்.

Source link