டூவீலர் மீது கல்லுாரி பஸ் மோதல்; மாணவியர் 4 பேர் பலி: திருச்செங்கோடு அருகே துயரம்

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் மாணவிகள் 4 பேர் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்கராம்பாளையத்தில் டூவிலர் மீது கல்லூரி வாகனம், மோதியது. இதில், கல்லூரி மாணவி சுபிதா (18), நிவேதா(16), தனுஸ்ரீ(11), அபிநயா(10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்கள் 4 பேரும் ஒரே வாகனத்தில் பயணித்ததாகவும், 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link