மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்கள் மயக்கம்

ஊட்டி: ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 19 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஊட்டியில் நூற்றாண்டு பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது 265 மாணவர்கள் பயின்று பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் இன்று சத்துணவு வழக்கம் போல் வழங்கப்பட்ட நிலையில் முட்டை சாப்பிட்ட 100 மாணவர்களில் 19 பேருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் சுரேஷ் (முதுகலை உயிரியல் ஆசிரியர்) உடனடியாக இந்த மாணவர்களை உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதாகவும், மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத நிலையில், யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் தெரிவித்தார்.

Source link