சிறந்த மேலாண்மை பாடமாக மகாபாரதம் திகழ்கிறது: கவர்னர் பெருமிதம்

சென்னை:”தொழில், நிறுவனம் மற்றும் தலைமைத்துவத்தை திறம்பட நிர்வகிப்பதற்கான சிறந்த மேலாண்மை பாடமாக மகாபாரதம் திகழ்கிறது,” என, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தெரிவித்தார்.

‘தி அமெரிக்கன் சொசைட்டி ஆப் மெக்கானிகல் இன்ஜினியர்ஸ்’ அமைப்பு சார்பில், ‘சர்வதேச மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாநாடு மற்றும் கண்காட்சி – 2026’ எனும் 3 நாள் கண்காட்சி தொடக்க விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது.

இக்கண்காட்சியை தொடங்கி வைத்து, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் பேசியதாவது:அமெரிக்காவுக்கு வெளியே, இந்தியாவில் இரண்டாவது முறையாக இத்தகைய மாநாடு நடப்பது பெருமைக்குரியது. உலகளாவிய தொழில்நுட்ப வல்லுனர்கள் அடிக்கடி இந்தியா வந்து, தங்களின் தொழில் நுணுக்கங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டதாகக் கருதப்படும் மகாபாரதத்தில், 18 பர்வங்கள் உள்ளன. அதில், ‘உத்யோக பர்வம்’ என்ற பகுதி மிகவும் முக்கியமானது. ‘உத்யோகம்’ என்றால் தொழில்.நிறுவனம், தொழில் மற்றும் தலைமைத்துவத்தை திறம்பட நிர்வகிப்பதற்கான சிறந்த மேலாண்மை பாடமாக இது திகழ்கிறது. அதில் பொறியியல் சார்ந்த பல குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. பிரதமரின் தொலைநோக்கு பார்வையான, ‘வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் சுயசார்பு பாரதம்’ என்ற இலக்குகளை அடைய, நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source link