இருசக்கர வாகனமும் கல்லூரி பேருந்தும் மோ*தி வி*பத்து: 4 மாணவிகள் பரிதா*பமாக உயிரி*ழப்பு!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் சக்கரம்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபிதா. இந்நிலையில் இன்று (03.09.2026) மாலை சுமார் 5.15 மணியளவில், சுபிதா தனது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தில் தனுஸ்ரீ, நிவேதா, அபிநயா ஆகிய மூன்று மாணவிகளையும் அழைத்துக் கொண்டு சக்கரம்பாளையத்தில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்று கொண்டிருந்தார். அப்போது, சக்கரம்பாளையம் கிராமத்திற்குச் செல்வதற்காக சுபிதா இருசக்கர வாகனத்தை வலதுபுறமாகத் திருப்பியுள்ளார். அச்சமயத்தில் ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மற்றொரு மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சுபிதா, ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாகவும், நிவேதா, தனுஸ்ரீ, அபிநயா ஆகியோர் எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் தனுஸ்ரீ ஏழாம் வகுப்பிலும், அபிநயா ஆறாம் வகுப்பிலும் படித்து வந்துள்ளனர்.

இந்த விபத்தில் மாணவிகள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சக்கரம்பாளையம் புதூர் கிராமத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link