Whatsapp-ல் வந்துவிட்டது Bill Payments வசதி..!! எப்படி பயன்படுத்துவது?

சந்தையில் போட்டியை சமாளிக்கவும், பயனர்களை கவரவும் புதுப்புது அப்டேட்களை வாட்ஸ் அப் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் (WhatsApp) செயலி இந்தியாவில் மின்சாரம், தண்ணீர், காஸ் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற மாதாந்திரக் கட்டணங்களை நேரடியாகச் செலுத்தும் பில் பேமெண்ட்ஸ் (Bill Payments) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் பாரத் கனெக்ட் (Bharat Connect – முன்னர் BBPS) வலையமைப்பின் மூலம் இந்த புதிய வசதி செயல்படுகிறது.

மின்சாரம், கேஸ் சிலிண்டர் கட்டணம், தண்ணீர், பாஸ்டேக் (FASTag), இன்சூரன்ஸ், காப்பீடு தவணை, கிரெடிட் கார்டு மற்றும் கடன் தவணை உள்ளிட்ட 30 பிரிவுகளின் கீழ் 22,700-க்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்களுக்கு பயனர்கள் நேரடியாகக் கட்டணம் செலுத்த முடியும். பயனர்களின் அன்றாட வேலைகளை ஒரே இடத்தில் எளிமையாக்கும் நோக்கில் இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வரவிருக்கும் கட்டணங்களை (Upcoming Bills) தானாகவே கண்டறிந்து காட்டும்.

ஒரே பில்லரின் கீழ் வீடு, அலுவலகம் போன்ற பல்வேறு கணக்குகளை நிர்வகிக்கலாம்.

Source link