ரவி மோகன் வாரிசுகள்: ரவி மோகனும், ஆர்த்தியும் ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்டு ஆரவ், அயான் என இரண்டு மகன்களுக்கு பெற்றோர் ஆன நிலையில் 2024ம் ஆண்டு பிரிந்துவிட்டார்கள். ஆர்த்தி உடன் சேர்ந்து வாழ்ந்தபோது எனக்கு மரியாதையே இல்லை, அவ்வளவு கொடுமைகளை அனுபவித்தேன்.
குடும்பத்திற்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். இனியும் முடியாது என்பதால் தான் வெறும் கையுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறேன் என்றார் ரவி மோகன். பெற்றோர்கள் பிரிந்த நிலையில் அம்மா உடன் இருக்கிறார்கள் மகன்கள்.
என் பிள்ளைகளை கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்கிறார் ஆர்த்தி என வேதனைப்பட்டார் ரவி மோகன். ஆனால் மகன்களை பார்க்க வாங்க என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என் மகள் ஆர்த்தி என்றார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார். இந்நிலையில் யார் பெயரையும் குறிப்பிடாமல் இன்ஸ்டாவில் ஒரு ஸ்டோரி போட்டிருக்கிறார் ஆர்த்தி.
பெருமை ஸ்டோரி: அம்மா தான் அவர்களை வளர்க்கும் நிலையில் நான் நல்ல தகப்பன் என பெருமையடிப்பதை பாருங்களேன் என்பதே ஆர்த்தியின் ஸ்டோரி. அதை பார்த்ததுமே, இது ரவி மோகனை மனதில் வைத்து தான் போஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
ஆர்த்தி இப்படி பொதுவாக ஸ்டோரி போட்டாலே அது கண்டிப்பாக யாரையாவது குறிக்கும் என பேசப்படுகிறது. முன்னதாக எவளாவது ஹீல் செய்கிறேன் என வந்தால் ஹீல்ஸாலேயே அடுச்சு விரட்டவும் என ஸ்டோரி போட்டிருந்தார் ஆர்த்தி. அதில் இருந்த ஹீல் என்கிற சொல்லை பார்த்துவிட்டு தெரபிஸ்ட் தான் ஹீல் செய்வார்கள். அப்படி என்றால் ரவி மோகனின் கம்பானியன் மற்றும் தெரபிஸ்டான கெனிஷா பிரான்சிஸுக்கு தான் இந்த ஸ்டோரி என சினிமா ரசிகர்கள் பேசினார்கள்.
கெனிஷா இசை: நான் ரவியை விட்டு போகிறேன், சென்னையை விட்டு போகிறேன், இன்ஸ்டாவில் இருந்து பிரேக் எடுக்கிறேன் என்று கிளம்பிச் சென்ற கெனிஷா பிரான்சிஸ் திரும்பி வந்துவிட்டார். இந்நிலையில் ரவி மோகன் இயக்கி வரும் An Ordinary Man படத்திற்கு இசையமைக்கப்போவது கெனிஷா தான் என பேச்சு கிளம்பியிருக்கிறது.
யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தை இயக்குவதோடு, தயாரிக்கவும் செய்யும் ரவி மோகனோ இசையமைப்பாளர் கெனிஷா தானா என்பதை இதுவரை உறுதி செய்யவில்லை. என் உயிர் இருக்கும் வரை ஆர்த்தி உடன் மீண்டும் சேர்ந்து வாழ மாட்டேன் என்று அண்மையில் உறுதி செய்தார் ரவி மோகன். இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் ரவியை நீக்காமல் அப்படியே வைத்திருக்கிறார் ஆர்த்தி.
ரவி, மாமியார் கண்ணீர்: முன்னதாக கெனிஷா கிளம்பியபோது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரவி மோகன் கண் கலங்கினார். அதை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் கூறினார்கள். அதன் பிறகு மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட வழக்கின் தீர்ப்பில் ஆர்த்திக்கு மாதம் ரூ. 3 லட்சம் கொடுங்கள் ரவி மோகன் என்றது நீதிமன்றம்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அதை பார்த்த சுஜாதா விஜயகுமாரோ, அது 10 பக்க தீர்ப்பு. அதன் முழு விபரம் தெரியாமல் ஆர்த்தியை குறை சொல்வது சரியில்லை. மகன்களுக்கு சாப்பாட்டுக்கு பணம், ஸ்கூல் ஃபீஸ் கட்ட பணம் கொடுக்காமல் இருக்கிறார் ரவி. என் மகளுக்கு நடந்த கொடுமையை நான் பார்த்தது மாதிரி வேறு எந்த பெற்றோருக்கும் நடக்கக் கூடாது என கண் கலங்கிவிட்டார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
