சென்னை ரிப்பன் மாளிகையில் 16 நாட்களாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில், கோரிக்கைகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
தங்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் கடந்த 16 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுடன், அரசு சார்பில் அமைச்சர்கள் குழு இன்று இறுதியாக நேரில் சந்தித்துச் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
சமூகப் பாதுகாப்பு, கௌரவமான பணிச்சூழல் மற்றும் நியாயமான ஊதியம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகத் தங்களின் வாழ்வாதாரத்தை பணயம் வைத்துப் போராடி வந்த இந்தத் தொழிலாளர்களின் குரலுக்கு அரசு இறுதியாகச் செவிசாய்த்துள்ளது.
போராட்டத்தின் பின்னணியும் கோரிக்கைகளும்:
பணி நிரந்தரம், முறையான ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துத் தூய்மைப் பணியாளர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தங்களின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். சமூகத்தின் மிக முக்கியமான மற்றும் கடினமான தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தங்களுக்கு, முறையான பணிப் பாதுகாப்போ அல்லது உழைப்பிற்கேற்ற ஊதியமோ வழங்கப்படுவதில்லை என்ற மனித உரிமைச் சார்ந்த ஆதங்கத்தை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ரிப்பன் மாளிகை பேச்சுவார்த்தை
இன்று காலை 11.30 மணியளவில் ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் மற்றும் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு போராட்டக் குழு பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது உங்கள் அரசாங்கம் – ஆதவ் அர்ஜுனா பேச்சு
ரிப்பன் மாளிகையில் போராடிய தூய்மைப் பணியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியவை, “தனது பேச்சை ஜெய் பீம் என ஆரம்பித்த ஆதவ் முதலமைச்சர் வென்ற வந்த பிறகு இந்த 100 நாள்களில் என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து வருவதாக தெரிவித்தார், இங்கு நான்கு அமைச்சர்கள் மட்டும் இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். முதலமைச்சரின் விஜய் மனது இங்கு தான் உள்ளது என ஆதவ் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் தெரிவித்தார்.
இது உங்கள் அரசாங்கம்; உங்களுக்குச் செய்யாமல் வேறு யாருக்குச் செய்யப் போகிறோம்?” என்று உணர்வுப்பூர்வமாக உறுதியளித்தார். பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார். அவுட் சோர்சிங் செய்து செய்து தனியார் மயமாக்கி உள்ளது முந்தைய அரசு” என சாடினார்.
ரிப்பன் மாளிகையை மட்டும் தான் விற்கவில்லை
மேலும் பேசிய அவர், கடந்த ஆட்சியாளர்கள் கடன் வாங்கி ஊழல் செய்தனர்; ஆனால் இந்த ஆட்சி கடன் வாங்கி மக்கள் நலத்திட்டங்களை செய்து வருவதாக தெரிவித்தார். இன்னும் ரிப்பன் மாளிகை மட்டும் தான் விற்கவில்லை; மற்ற எல்லாவற்றையும் விற்றுவிட்டார்கள் என அமைச்சர் ஆதவ் தெரிவித்தார். கொஞ்சம் டைம் குடுங்க விரைவில் அனைத்து பிரச்சினைகளையும் முதலமைச்சர் தீர்ப்பார் என போராட்டக்காரர்களிடம் அவர் தெரிவித்தார்.
Source link
