அமர்ந்தபடியே வணக்கம்; அமைச்சரை அவமதித்தாரா ரம்யா கிருஷ்ணன்? நீலாம்பரி கேரக்டரை வைத்து நெட்டிசன்கள் கமெண்ட்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரம்யா கிருஷ்ணன் படையப்பா நீலாம்பரி ஸ்டைலில் நடந்துகொண்டார் என்று அவரது புகைப்படத்தை இணையத்தில் பரபரப்பி வருகின்றனர். 

1999-ம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் ரம்யா கிருஷ்ணனின் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக இன்றுவரை அவரது பெயர் சொல்லும் படமாக இருக்கிறது. அதன்பிறகு பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் ராஜமாதா கேரக்டரில் அவர் நடித்திருந்தாலும், படையப்பா படத்தில் நடித்த நீலாம்பரி கேரக்டர் இன்னும் அவரின் அடையாளமாக இருக்கிறது. அவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியானாலும், அதையும் படையப்பா நீலாம்பரி கேரக்டரையும் ஒப்பிட்டு பேசுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் ராஜ்மோகன் வரும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்த நிலையில், ரம்யா கிருஷ்ணன் தனது இருக்கையில் அமர்ந்தபடி வணக்கம் செலுத்திவிட்டு, பிறகு கால்மேல் கால் தூக்கி போட்டுக்கொண்டு பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அமைச்சருக்கு நீலாம்பரி ஸ்டைலில் கவனித்ததாக இணையதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்க்கும்போது இருவேறுபாடான கருத்துக்கள் பரவி வருகிறது. அவர் அமைச்சரை அவமதித்தாரா என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்து வரும் நிலையில், அவர் அமைச்சரை அவமதித்தார் என்று சொல்வது சரியாக இருக்காது. அவர் அமர்ந்தபடியே வணக்கம் சொல்லிவிட்டு, தனது அருகில் இருந்த நடிகையுடன் பேச தொடங்கிவிட்டார். ஆனால் அவர் கால் மேல் கால் போட்டு பேசியது படையப்பா நீலாம்பரி கேரக்டரை நினைவுபடுத்தவிட்டது என்றும் கூறி வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்களில் சிலர், என்னதான் இருந்தாலும் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் வருகிறார் அப்போது மரியாதைக்காகவாவது எழுந்து நின்று இருக்கலாம். என்று கூறி வருகின்றனர். இது குறித்து இணையதளங்களில் தற்போது கமெண்ட்ஸ்களில் விவாதங்கள் எழுந்து வருகிறது.



Source link