பாண்டி திட்டத்தால் கடுப்பான இந்து.. கிருபா கொடுத்த வாக்கு – சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்
சின்னஞ்சிறு கிளியே சீரியலில் நேற்றைய எபிசோடில் கர்ணாவின் முன்னாள் காதலியாக சுகந்தி பிரியா என்ட்ரி கொடுத்திருந்த நிலையில், இன்று, சுகந்தி பிரியா கர்ணாவை தனியாக ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று பேசத் தொடங்குகிறார். பின்னர் திடீரென அவரை கட்டிப்பிடிக்கிறார். இதையெல்லாம் வெளியே இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் இந்து, “என்னடி இது?” என்று கோபத்தில் கதவைத் திறந்து உள்ளே செல்கிறாள்.
அதன்பிறகு சுகந்தி பிரியாவுக்கும் இந்துவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடிக்கிறது. இருவரும் மாறி மாறி சண்டையிடும் நிலையில், ஒரு கட்டத்தில் சுகந்தி பிரியா கவுண்டவுன் சொல்ல ஆரம்பிக்கிறார். இதன் அர்த்தம் புரியாமல் இந்து தொடர்ந்து அவரிடம் சண்டையிடுகிறாள். கவுண்டவுன் முடிந்ததும், “அவ்வளவுதான், என் டைம் முடிந்துச்சு. நான் நடிக்க வந்தேன், நடித்துட்டேன். எனக்கு 7,500 ரூபாய் பேமெண்ட். நான் கிளம்புறேன்” என்று கூறி அங்கிருந்து செல்ல முயல்கிறாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இந்து, “இது என்ன நாடகம்?” என்று கேட்க, கர்ணா உண்மையை சொல்ல தயங்குகிறார். அப்போது இந்து, “போதும், நிறுத்து” என்று கூறிவிட்டு பாண்டியின் பெயரை சொல்லி கோபப்படுகிறாள். இதனால் இந்த திட்டத்திற்குப் பின்னால் பாண்டிதான் இருப்பது தெரியவருகிறது. உடனே பாண்டியைத் தேடி செல்லும் இந்து, கட்டையை எடுத்து அவரை அடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறாள். தலையில் வீக்கம் ஏற்பட்ட நிலையில் இருக்கும் பாண்டி, சாப்பாடு போடுமாறு கேட்க, இந்து அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.
கர்ணா சமாதானப்படுத்த முயன்றாலும், அவருக்கும் சேர்த்து இந்து பல்பு கொடுக்கிறாள். இதையடுத்து பாலு இந்துவை சந்திக்க வருகிறார். ஆனால் பாலுவைப் பார்த்ததும் தீனதயாளன் வீட்டிற்குள் சென்று மறைந்து கொள்கிறார். இதை கவனிக்கும் கிருபாவுக்கு சந்தேகம் எழுகிறது. “அப்பா ஏன் பாலுவைப் பார்த்ததும் இப்படி நடந்துகொள்கிறார்?” என்று யோசிக்கத் தொடங்குகிறார்.
மறுபுறம், புவனா கிருபாவிடம் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறாள். “எனக்கும் கர்ணா மாமாவுக்கும் கல்யாணம் செய்து வைப்பதாக சொன்னீர்கள். ஆனால் இன்னும் எதுவும் நடக்கவில்லை. இந்த வேகத்தில் பார்த்தால் ஆறு மாதத்தில் அவர்களுக்கு குழந்தையே பிறந்துவிடும் அளவுக்கு இந்துவும் கர்ணாவும் நெருக்கமாக இருக்கிறார்கள்” என்று கூறுகிறாள்.
இதைக் கேட்கும் கிருபா, “நான் கொடுத்த வாக்கு கண்டிப்பாக நிறைவேறும். நான் சொன்னது நடக்கும்” என்று உறுதி அளிக்கிறார். இப்படியான நிலையில், கிருபாவின் வாக்குறுதி என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? தினதயாளன் பாலுவைப் பார்த்து ஏன் மறைகிறார்? பாண்டியின் திட்டத்தால் கடுப்பான இந்து அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உச்சகட்ட பதட்டத்தில் கவிதா.. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தயாராகும் குடும்பம் – திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்
திருமாங்கல்யம் நேற்றைய எபிசோடில் கௌதம், திரு மற்றும் திவ்யாவிடம் சிக்கிய நிலையில், இன்று, திருவும் திவ்யாவும் இணைந்து கௌதமை மடக்கிப் பிடிக்கின்றனர். தொடர்ந்து அவனது அட்டகாசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவனை ஆபீஸிலிருந்து விரட்டியடிக்கின்றனர். இதற்குப் பிறகு மகா, கவிதாவை சந்தித்து, “கௌதம் தான் உன்னுடைய கணவர் என்பது தெரிய வந்தால் பெரிய பிரச்சனை ஏற்படும்” என்று எச்சரிக்கிறார். இதனால் கவிதா கடும் பதற்றத்தில் ஆழ்கிறாள்.
இதையடுத்து வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், மகாவின் புத்தகம் திடீரென திறக்கிறது. அதில் வீட்டிற்கு கிருஷ்ணர் வரப்போகிறார் என்றும், ஒரு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எழுதப்பட்டிருப்பதை பார்த்த மகா அதிர்ச்சி அடைகிறாள். பதற்றத்துடன் கீழே இறங்கி வரும் மகா, வீட்டிற்கு வெளியே ஹாலோகிராம் தொழில்நுட்பத்தின் மூலம் கிருஷ்ணர் தோன்றியிருப்பதை பார்க்கிறாள். புல்லாங்குழல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் அங்கு கூடுகின்றனர். பின்னர் அது திருவின் ஏற்பாடு என்பது தெரிய வந்ததும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் அதே சமயத்தில் திரு மேலிருந்து கீழே இறங்கி வர, “ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் எப்படி இருக்க முடியும்?” என்று மகா குழப்பமடைகிறாள்.
பின்னர் திரு, “நாளை நம்ம வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதோடு பரசுராமன் குரூப் ஆஃப் கம்பெனியில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தங்க மோதிரம் பரிசாக வழங்கப் போகிறோம்” என்று அறிவிக்கிறார். இதைக் கேட்டு குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைக்க, கவிதா மட்டும் மனதில் ஒரு திட்டம் தீட்டுகிறாள். அதைத் தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி நாடகத்திற்கான கதாபாத்திரங்கள் முடிவு செய்யப்படுகின்றன. அதன்படி, திரு கிருஷ்ணராகவும், மகா ருக்மணியாகவும், திவ்யா ராதையாகவும் நடிக்க முடிவு செய்யப்படுகிறது.
மூவரும் நாடகத்திற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருக்கும்போது, திவ்யா உணர்ச்சிகரமாக பேசுகிறாள். கிருஷ்ணனுக்கும் ருக்மணிக்கும் திருமணம் ஆகிவிட்டது. அதனால் ராதையாக நான் உன்னை நினைத்துக்கொண்டு வாழ்ந்துவிடுவேன்” என்று கூறும் திவ்யா, அடுத்த நொடியே அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறாள். “ஆனால் நான் அப்படி சொல்லப் போவதில்லை. நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நாளை நடக்கும் நாடகத்தில் தெரிந்துகொள்வீர்கள்” என்று சஸ்பென்ஸ் வைக்கிறாள். இதனால் அடுது்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
போட்டுக் கொடுத்து வாங்கிக் கட்டிய சந்திரகலா.. காரியத்தை கச்சிதமாக முடித்த கார்த்திக்! – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜராஜன் கருப்பு வேஷத்தில் கோவில் சடங்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய நிலையில், இன்று ராஜராஜன் திட்டமிட்டபடி கோவில் சடங்குகளை முடிக்க, மறுபக்கம் ரோகிணி திடீரென வலி வந்தது போல நடித்து சந்திரகலாவையும் சாமுண்டீஸ்வரியையும் திசைதிருப்புகிறார். இதனால் அவர்கள் கவனம் முழுவதும் ரோகிணி பக்கம் திரும்புகிறது.
இதற்கிடையில், ராஜராஜன் எப்போது அறைக்குத் திரும்புவார் என்று தெரியாமல் மயில்வாகனம் பதற்றத்தில் காத்திருக்கிறார். பின்னர் ரோகிணிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது தெரிய வர, சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் ராஜராஜனின் அறையை நோக்கி செல்கின்றனர். அந்த நேரத்தில் சரியாக அறைக்குள் வந்து படுத்துக் கொள்கிறார் ராஜராஜன். அவரை அங்கே பார்த்த சாமுண்டீஸ்வரி, “மாமா இங்குதான் இருக்காரு” என்று கூறி சந்திரகலாவை கடுமையாக திட்டுகிறார். இதனால் அவமானத்தில் சிக்கிய சந்திரகலா, சிவனாண்டிக்கு போன் செய்து தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
மறுபக்கம், கார்த்திக் ரேவதி வீட்டிற்கு சென்று பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறுகிறார். அதைக் கேட்ட பரமேஸ்வரி மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். இவ்வாறு எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் கதையில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது? சந்திரகலாவின் அடுத்த திட்டம் என்ன? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
