புதுச்சேரி: நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று (செப்.4) புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார்.
2022ம் ஆண்டு ஆக.8ம் தேதி புதுச்சேரியில் உள்ள தமது சகோதரர் மரிய கூலோத், அவரது மனைவி கேரளின் ஆகியோரின் வீட்டுக்குள் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக நிதி அமைச்சர் மரியவில்சன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது
விசாரணைக்காக மரிய வில்சன் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதை கண்டித்த நீதிமன்றம் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல விமர்சித்து இருந்தது. செப்.4ம் தேதி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இந் நிலையில், இன்று (செப்.4) மரிய வில்சன் புதுசேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை அவர் பெற்றுக் கொண்டார்.
