சாலை வி*பத்தில் 4 மாணவிகள் உயிரி*ழப்பு : முதல்வர் விஜய் இரங்கல்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் நேற்று (03.09.2026) மாலை, கல்லூரியில் பயின்றுவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுபிதா (வயது 19) என்ற மாணவி பள்ளியில் பயின்றுவரும் தனது சகோதரிகளான  நிவேதா (வயது 17), தனுஸ்ரீ (வயது 13), மற்றும் செல்வி அபிநயா (வயது 12) ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது தனியார் கல்லூரிப் பேருந்து மோதியது. 

இந்த விபத்தில் நிவேதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகியோர் சம்பவ இடத்திலேயும், சுபிதா என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலும் உயிரிழந்தனர். இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவிகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Source link