ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

கயா: அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சி நிறுவனரும், பங்கிபூர் எம்எல்ஏவுமான பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.

ராமர் கோயில் அறக்கட்டளைக்கு புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம் குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பேட்டி;

ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கலாம். அது சரியான ஒன்று. நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்களின் முக்கிய நம்பிக்கையாக ராமர் கோயில் உள்ளது. இங்கு பெருமளவு நடந்ததாக கூறப்படும் திருட்டு, முறைகேடுகள் ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

ராமர் கோயிலை ஒரு நம்பிக்கை ஸ்தலமாக மாற்றுவதில் பாஜ, விஹெச்பி ஆகியவையும் முக்கிய பங்கை ஆற்றி இருக்கின்றன. எனவே, இந்த குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். புதிய நபரை நியமிப்பதால் மட்டுமே இந்த பிரச்னை முடிவுக்கு வராது.

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

Source link