ராகு தற்போது கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வருகின்றார். சுக்கிரன் செப்டம்பர் இரண்டாம் தேதி துலாம் ராசியில் பேசியது ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வருகிறார். சுக்கிரனுக்கு ஐந்தாம் இடத்தில் ராகுவும், ராகுவுக்கு ஒன்பதாம் இடத்தில் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் நவ பஞ்சம ராஜயோகம் உருவாகிறது.
ராகு இருள் கிரகம் எனவும், மிகவும் அசுப கிரகம் எனவும் அழைக்கப்படுகிறது. சுக்கிரன் அசுரர்களின் குரு எனவும், சுப கிரகம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்களாக விளங்குகின்றனர்.இந்த இரண்டு கிரகங்களிடையே உருவாகக்கூடிய நவபஞ்சமாக யோகம் மிகவும் நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். இதனால் எந்தெந்த ராசிகள் நல்ல பலனை அடைவார்கள் என தெரிந்து கொள்வோம்.
நவபஞ்சம யோக அருள்
சுக்கிரன் செல்வத்தையும், அழகு, மகிழ்ச்சி, வசதிகளை தரக்கூடியவர். இவர் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வருகின்றார்.
அதே சமயம் ராகு, கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். பொதுவாக ராகுவும் சுக்கிரனும் லௌகீக இன்பங்களையும், ஆடம்பர வாழ்க்கை, வசதிகளை தரக்கூடியவராக அல்லது அதன் மீது ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய தன்மையை கொண்டுள்ளனர்.
மேலும் அழகு, காதலை தரக்கூடியவர் சுக்கிரன். ஒரு சிறிய விஷயத்தில் கூட பெரியதாக்கக் கூடியவர் ராகு. இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து சுகபோக வாழ்க்கையை பெறுவார்கள். இவர்களின் அமைப்பால் ஏற்படக்கூடிய நவபஞ்ச யோகம் சில ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை தரக்கூடியதாக இருக்கும்.
மிதுன ராசி
மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சுக்கிரனும்,9ம் இடத்தில் வராகவும் சஞ்சாரம் செய்து வருகின்றனர்.. மேலும் இவர்களிடையே உருவாகும் நவபஞ்சமாக ராஜயோகம் உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், தன லாபமும் சேர கூடியதாக இருக்கும்.
மேலும் இந்த காலத்தில் நீங்கள் அறிவு திறனுடன் செயல்படுபவர்கள். உங்களுடைய முடிவு எடுக்கும் திறன் வெகுவாக அதிகரிக்கும். நீங்கள் முன்னர் செய்த முதலீடுகள் மூலம் லாபத்தை பெறுவீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்தவும், ஆச்சரியமான சில நன்மைகள் நடக்கக் கூடியதாக இருக்கும். குடும்ப உறவில் மகிழ்ச்சி, துணையுடன் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள்.
துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களுக்கு, உங்கள் ராசியில் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும், ராகு கிரகத்திற்கு இடையே நவபஞ்ச யோகம் உருவாகக்கூடிய காரணத்தால் உங்களுடைய சூழலும், செயல்படுகலும் நன்மையை தரும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி, புத்திசாலித்தனமான செயல்பாடு, லாபம் உள்ளிட்ட பல நன்மைகளை பெறுவீர்கள்.
மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறை, ஊடகம், வியாபாரம் போன்ற விஷயங்களில் முன்னேற்றத்தை அற்புதமாக வெற்றிகளையும் பெறுவீர்கள். துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு திருமண வாழ்க்கையில் மற்றும் காதல் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். துணையுடன் உறவு வலுவடையும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு உங்களுடைய லாப ஸ்தானத்தில் சுக்கிரனும், தைரிய ஸ்தானத்தில் ராகுவும் இருப்பது, இந்த கிரகங்கள் ஏற்படுத்தக்கூடிய நவபஞ்சமும் யோகம் உங்களுடைய வருமானத்தை அதிகரிக்கும். உங்களுடைய நிதிநிலை மற்றும் குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கக் கூடியதாக இருக்கும். மகத்தான வெற்றியை பெறுவீர்கள்.
புதிய தொழில், வியாபாரம் மற்றும் கூட்டாளிகளின் மூலம் நாமகரமான முடிவுகளை பெற வாய்ப்புகள் உண்டு. புதிய வேலை, தொழிலை தொடங்குவதற்கு சாதகமானதாக இருக்கும். பணியிடத்திலும், குடும்பத்திலும் உங்கள் மரியாதை, நல்லுறவும் மேம்படும்.
கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களுக்கு நவபஞ்சம் சிறப்பான பலன்களை தரும். உங்கள் ராசியில் ராகுவும், ஒன்பதாம் இடத்தில் சுக்கிரனும் இருப்பதால் உருவாகும் என்ற யோகத்தினால், பல்வேறு கடினமான வேலைகள் கூட திடீரென முடிவதை காண்பீர்கள். எந்த ஒரு முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு துணையாக இருக்கும். அந்த காலகட்டத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
குடும்பத்தினருடன் சேர்ந்து பயணம் செல்வதற்கான நல்ல சூழலும் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவோம் வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய கணவரவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
