காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி; பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்; ஏகே ரக துப்பாக்கி, ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் புட்காமின் அஷ்தார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அப்போது பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஒரு ஏகே ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப் படுகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Source link