பெருவெள்ளத்தில் உருக்குலைந்த நேபாளம்..!! ரூ.24,000 கோடி அளவுக்கு சேதம்..!! வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

நேபாளம் நாட்டில் கடந்த மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். திடீரென பெருக்கெடுத்து ஓடிய கடும் காற்றாற்று வெள்ளத்தால், அந்நாட்டின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தின் பெரும்பகுதி ஒட்டுமொத்தமாக உருக்குலைந்து முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது.

வெள்ளத்தின் கோர பிடியில் சிக்கி வீடுகள், அரசு அலுவலகங்கள், பாலங்கள், போக்குவரத்துச் சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த பேரிடரால் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.24,250 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தர்மராஜ் உப்ரேதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ரசுவா மாவட்டம் முழுவதுமாக உருக்குலைந்துபோய், பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரங்களையும், வீடுகளையும் இழந்து நிர்க்கதியாக நிற்கின்றனர். இப்பகுதியில் மின்சாரம், குடிநீர், சாலைகள், பாலங்கள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்புகள் அனைத்தும் அடியோடு நாசமாகிவிட்டதால், அவற்றை மீண்டும் புதிதாக உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கணக்கிடப்பட்டுள்ள ரூ.24,250 கோடி என்பது முதல்கட்ட ஆய்வறிக்கை மட்டுமே; முழுமையான ஆய்வு முடிந்த பிறகுதான் உண்மையான பாதிப்பும் ஒட்டுமொத்த இழப்பும் தெரியவரும்” என்று கூறியுள்ளார்.

அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி..!! தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வாபஸ்..!!

Next Post

Fri Sep 4 , 2026

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவதற்கான தீவிர முயற்சிகளில் கர்நாடக அரசு இறங்கியுள்ள நிலையில், அதனைக் கண்டித்து வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. முன்னதாக, மேகதாது விவகாரம் மற்றும் தமிழக விவசாயிகளின் உரிமைகள் தொடர்பாக, மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டாருடன் […]

Protest 2026

Source link