குடிநீர் விநியோகம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றி ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரில் குடிநீர் சரியாக வரவில்லை எனக் கூறி, ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இசக்கி பாண்டி என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் மீது கல்லை எறிந்துள்ளார்.
அப்போது கல் அவரது தலையில் பட்டதில், அவர் மயங்கி விழுந்தார். இதில், ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் கைது செய்யப்படுவார் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
