அச்சமயத்தில் படியில் அமர்ந்திருந்த இவரது கால் ரயில் நிலைய நடைமேடையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரத்தக் கசிவு அதிகம் ஏற்பட்டு துடிதுடித்துள்ளார் அப்போது ரயிலில் இருந்தவர்கள் இவருக்குத் துணியால் காலை கட்டி முதலுதவி செய்துள்ளனர். அதன் பின்னர் உடனடியாக 108 அவசர ஊர்திக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சிதம்பரம் ரயில் நிலையத்தில்108 அவசர ஊர்தியின் ஊழியர்கள் ரயில் வரும் வரை காத்திருந்து இவரை நடைமேடையில் இறக்கி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.
ரயில்வே துறை ரயில்வே இருப்புப் பாதை காவல்துறை உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகள் பயணிகள் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்யக் கூடாது என பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது ஆனால் சில பேர் இதுபோன்று பயணம் செய்வதால் பல்வேறு ஆபத்தான விபத்துக்கள் ஏற்படுகிறது எனவே பயணிகள் படியில் அமர்ந்து பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
