மும்பை: இந்திய வங்கிகளில் டிபாசிட்களின் வளர்ச்சி, ஜூலை 31 நிலவரப்படி ஆண்டுக்கு 15.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2016 டிசம்பருக்கு பின் பதிவான அதிகபட்ச வளர்ச்சி என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 15 நிலவரப்படி வங்கிகளில் டிபாசிட் வளர்ச்சி 12.7 சதவீதமாக இருந்தது .
ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்த இரு வாரங்களில் மட்டும் வங்கிகளின் மொத்த டிபாசிட் 6.61 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதையடுத்து வங் கிகளின் மொத்த டிபாசிட் 269.41 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
