பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மிதமான மழைக்கு வாய்ப்பு: மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் இன்று காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது.
-
Sep 05, 2026 07:35 IST
லஞ்சம் வாங்கிய அதிகாரியின் இடைத் தரகர் வீட்டில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்!
ஓசூரில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைதான இடைத்தரகர் சிவகுமாரின் சேலம் வீட்டில் 7 கிலூ தங்கம், ஊ. 27 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். சிவகுமாரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.
-
Sep 05, 2026 07:32 IST
275 இந்தியர்களின் கதி என்ன?
நேபாள பெருவெள்ளத்திற்குப் பின் இந்தியாவைச் சேர்ந்த 275 பேர் மாயமானதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமடைந்துள்ளன.
-
Sep 05, 2026 07:32 IST
மிதமான மழைக்கு வாய்ப்பு
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் இன்று காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
-
Sep 05, 2026 07:31 IST
ஆக்சிஜன் சிலிண்டர் வாகன டயர் வெடித்து விபத்து
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆக்சிஜன் சிலிண்டர் வாகன டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
-
Sep 05, 2026 07:30 IST
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Sep 05, 2026 07:30 IST
கேரளத்தில் விபத்து – தமிழக மாணவர்கள் 8 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலம், திருச்சூர் அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த எட்டு பேரும், காரை வெட்டி வெளியே எடுக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள், திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
