உலகை அச்சுறுத்தும் ‘அதிதீவிர எல் நினோ’: உலக வானிலை அமைப்பின் பகீர் எச்சரிக்கை..!!

மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் நீர் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் வெப்பமடைவதே ‘எல் நினோ’ எனப்படும் இயற்கையான பருவநிலை நிகழ்வாகும். இந்த வெப்பமயமாதல் வளிமண்டல சுழற்சியை மாற்றியமைக்கிறது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் மழை பொழியும் இடங்களும், வெப்பம் குவியும் பகுதிகளும் தலைகீழாக மாறக்கூடும்.

தற்போதுள்ள சூழலில் இந்த ‘எல் நினோ’ நிகழ்வு ஏற்கனவே வலுவடைந்து வருவதுதான் மிகுந்த கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. பசிபிக் பெருங்கடலின் அசாதாரண வெப்பம், இந்த ‘எல் நினோ’வை அதிதீவிர நிலைக்குக் கொண்டுசெல்லும் என்றும், இது 2026-ன் இறுதிக்குள் உச்சத்தைத் தொடக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது.

மேலும் இந்த அதிதீவிர எல் நினோ நிகழ்வு வரும் மாதங்களில் மேலும் வலுவடைந்து, 2027ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்கும். சில நாடுகளில் கடும் வறட்சியும், சில பகுதிகளில் கடும் வெள்ளமும் ஏற்பட வாய்ப்பு (பருவமழை பாதிப்பு).

அதாவது, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட மிக அதிக அளவில் வெப்பமடைந்துள்ளது.

Source link