திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் இந்த நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி தில்லை நகரில் உள்ள அவருடைய இல்லத்திலும் சோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கே.என். நேரு வீட்டில் சோதனை நடந்து வருவது தொடர்பாக பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source link
