காங்கிரஸ் நிர்வாகியான அசன் மௌலானா மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசன் மௌலானா வெற்றி பெற்றிருந்தார். தேர்தலுக்காக செலவு செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட 17 லட்சத்துடன் குறைத்துக் காட்டப்பட்ட 32 லட்சம் சேர்த்தால் மொத்தமாக 49 லட்சம் ரூபாய் தேர்தலுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. நடைமுறையில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட 30 லட்சம் ரூபாய் என்ற உச்சவரம்பை மீறக் கூடிய வகையில் செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இது தொடர்பாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற விசாரணைகளுக்கு ஆஜராகி அவர் விளக்கம் தெரிவிக்கவில்லை. தேர்தல் செலவுக்கான உண்மையான சரியான கணக்கை தாக்கல் செய்யத் தவறி, தேர்தல் செலவு கணக்ககை மறைத்திருப்பதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக அடுத்து வரும் மூன்று ஆண்டுகள் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு தடை விதிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
