தவெக அரசு கே.என். நேருவை பழிவாங்கப் பார்க்கிறது.. காழ்ப்புணர்ச்சியின் உச்சம்: கனிமொழி கடும் தாக்கு – dmk mp kanimozhi criticized tvk govt is seeking to exact revenge on kn nehru

திமுக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனை திமுக தலைவரான மு.க. ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், எம்பி கனிமொழியும் இவ்விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் எட்டாம் தேதி நிறைவு பெறவுள்ளது. இப்படியான நிலையில் திமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே கே.என். நேரு இல்லத்தில் சோதனை நடவடிக்கையை தவெக அரசு மேற்கொண்டுள்ளதாக திமுக தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் திமுகவின் துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவதை கண்டித்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். தவெக அரசு காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளதாக கடுமையான விமர்சனங்களை தனது பதிவில் கனிமொழி முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது.

Source link