பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்; டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம்: மேற்பார்வையாளர்கள் 40 பேர் சஸ்பெண்ட்

தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுவிலக்கு ஆயத்தீவை மானியக் கோரிக்கையின் போது மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ஒரு ரூபாய் வசூலித்தால் கூட சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் எச்சரித்திருந்தார்.

அழிந்து போன மிதக்கும் அண்டார்டிகா; ஒரு பாலி தீவே காணாமல் போய்விட்டது: தரைமட்டமான 40 ஆண்டுகால சாம்ராஜ்யம்

150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை

அமைச்சரின் எச்சரிக்கைக்கு பிறகும் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வசூலித்ததாகக் கூறி பல்வேறு டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சுமார் 150 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சக ஊழியர்கள் எதிர்ப்பு

இந்த நிலையில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் திடீர் பணிநிறுத்தம் மற்றும் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

40 மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்

இது ஒருபுறம் இருக்க  காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் 40 பேரை உடனடியாக தற்காலிக  பணியிடைநீக்கம் செய்ய டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். ஊழியர்கள் மீது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒருபுறம் தொடரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை மூடிய மேற்பார்வையாளர்கள் மீதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது டாஸ்மாக் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Source link